சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் அளவிடச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.
இதையொட்டி, நாகப்பட்டு கிராமத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர், பரந்தூர் பசுமை விமான நிலைய நில எடுப்பு வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் நில அளவீடு செய்யச் சென்றனர்.
அப்போது அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.