ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைத்ததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.