வேலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை பணி செய்யவிடாமல் திமுகவினர் மிரட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது வேலூர் மாநகராட்சி 33-ஆவது வார்டு உறுப்பினர் சண்முகம் திமுக ஆதரவாளருடன் சென்று, கணினி மையத்துக்குள் நுழைந்து தங்களது கோரிக்கையை முதலில் பதிவு செய்யுமாறு அலுவலர்களை மிரட்டினர். இதனால் அலுவலர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்.