ஹைதியில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கரீபியன் தீவு நாடான ஹைதியில், அந்நாட்டு அதிபராக இருந்த ஜொவனெல் மோய்ஸ், 2021-ல் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமராக ஏரியல் ஹென்றி பதவி வகித்தார். இவர் ராஜினாமா செய்ததை அடுத்து, செயல் பிரதமராக கேரி கோனில் செயல்பட்டு வருகிறார்.
இந்த ஆட்சிக்கு எதிராக, செரிஸியர் என்பவர் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீதும், அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் அவர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், போன்ட் சோண்டே நகரில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.