நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கில், இருவரும் ஆஜராகத காரணத்தால் வழக்கின் விசாரணை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், மற்றும் ஐஸ்வர்யா ஆஜராகவில்லை, இதையடுத்து விசாரணை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.