திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரமோற்சவ திருவிழாவின் 4ம் நாள் நிகழ்வில்
தங்க சர்வு பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி, தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது, நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வழிபாடு நடத்தினர். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.