பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் அரசு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வந்த அமைச்சர் சிவசங்கரிடம் பேருந்துகள் முறையாக இயங்குவதில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அரசின் புதிய திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
இதனை தொடக்கி வைப்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வருகை தந்தார்.
அப்போது புதுகுடிசை பகுதிக்கு முறையாக பேருந்துகள் வருவதில்லை எனவும் ஊராட்சி சார்பில் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
அதேபோல், சாலை வசதி முறையாக இல்லை என கூறிய பொதுமக்கள், கழிவுநீர் கால்வாய் வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டினர்.