நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர் பத்திரப் பதிவு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ராதாபுரத்தில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இசக்கியம்மாள் என்பவர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருக்கும் போதே இடைத்தரகர் ஒருவர் அவருக்கு முன்பாக பத்திரத்தை பதிவு செய்து அங்கிருந்த அரசு கோபுர முத்திரையை புதிய பத்திரங்களில் வைத்து கையொப்பமிட்டுள்ளார்.
மேலும், பத்திர பதிவு செய்து வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோரிடம் கையெழுத்து பெற்று அரசு அதிகாரி போல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்து கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளரின் கைரேகையை பயன்படுத்தி போலியான பத்திரம் பதிவு செய்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.