பிரான்சில் பயிற்சி பெற்று வரும் உக்ரைன் ராணுவ வீரர்களை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் நேரில் சந்தித்தார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைனை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பயிற்சி வீரர்கள் கிழக்கு பிரான்சில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்தார். அதில் ராணுவ வீரர்களும் மேற்கொள்ளும் பயிற்சிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.