10 ஆண்டு கால மோடி ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர் உள்ளிட்டவை வளர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்.
10 ஆண்டு கால மோடி ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்று பெருமிதம் தெரிவித்த அவர், இதனை எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதம் மற்றும் வடகிழக்கு மோதல்களை மோடி அரசு குழி தோண்டி புதைத்து விட்டதாகக் கூறிய அமித்ஷா, மோடி அரசின் குறிப்பிடத்தக்க திட்டங்களால் 2047-ல் உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என குறிப்பிட்டார்.