ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி சுற்றில் முன்னணி வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சீனாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் கால் இறுதி சுற்றில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் கார்லஸ் அல்காரஸ் , செக் நாட்டைச் சேர்ந்த தாமஸ் மகக் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தாமஸ் மகக் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி 7 – 6 ,7 – 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தாமஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.