இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் வீரர் கேமரூன் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் எனவே அவர் தொடரிலிருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.