வரும் அக்டோபர் 25,26 ஆகிய தேதிகளில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செயற்குழு கூட்டம் உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே நடைபெறும் என ஆர்.எஸ்.எஸ் மக்கள் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அகில பாரத பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள், செயலாளர்கள், அமைப்புச்செயலாளர்கள், இணை அமைப்பு செயலாளர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற அகில பாரத பிரதிநிதி சபையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயலாக்கம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.