வேலூர் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விருதம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வளாகத்தில் உள்ள பைப் லைனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுனணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.