கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் உலா வந்த பாகுபலி யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
சிறுமுகை லிங்காபுரம் சாலையில் வந்த வாகன ஓட்டிகள், பாகுபலி யானைக் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சாலையில் அங்கும் இங்குமாக யானை உலாவிக் கொண்டு இருந்ததால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் சேர்ஃது டார்ச் லைட் அடித்தும், பட்டாசு வெடித்தும் பாகுபலி யானையை வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.