சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
அனுப்பூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரைசாமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பேளூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம், துரைசாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே துரைசாமி உயிரிழந்த நிலையில் தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
















