சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் சிறுத்தையை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கடந்த சில நாட்களாக கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர், சிறுத்தையை பார்த்து பீதியடைந்துள்ளார். இதுகுறித்து மக்கள் அளித்த தகவலின் பேரில், கெங்கவல்லி, தெடாவூர் பகுதியில், நவீன கேமரா பொருத்தி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட வனத்துறையினர், ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.