சுதந்திர போராட்ட தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் சமூக மாற்றத்திற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துவதாகவும், அவரது ஆளுமை மற்றும் லட்சியங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் உத்வேகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.