துர்கா அஷ்டமியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்று சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் துர்கா அஷ்டமியை முன்னிட்டு “கன்யா போஜ்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 2 முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளை துர்கா தேவியாக கருதி வழிபடும் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தனது மனைவியுடன் பங்கேற்று சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கினார்.