தமிழக மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நம் ஒவ்வொரு செயலிலும் அறிவாகவும் ஆற்றலாகவும் திகழும் அன்னை சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்து, தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக அமையவும், அன்பும் ஞானமும் திகழவும், அனைவரும் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ அன்னையின் அருளை வேண்டிக் கொள்கிறேன் எனத் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.