ஹரியானாவில் பாஜக அரசு அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய பாஜக அரசின் பதவியேற்பு விழா வரும் 15-ம் தேதி பஞ்ச்குலாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய பஞ்ச்குலா துணை ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில், பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.