அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரியான ராமலிங்கம், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை அழைத்து கொண்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றிருந்தார். இதனிடையே ராமலிங்கத்தின் உறவினர் பத்திரிகை வைப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தபோது கதவு திறந்து கிடந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்தார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் வீட்டிற்கு திரும்பிய ராமலிங்கம், பீரோவில் இருந்த 33 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.