நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் களைகட்டி வரும் நிலையில், தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அப்போது வெள்ளை, ஊதா, இளஞ்சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் 35 ஆயிரம் ரோஜா செடிகள் பூத்துக் குலுங்கியதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும், மலர் செடிகளுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.