விசாகப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கோயில் கருவறை, 6 கிலோ தங்கம், 4 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 10 கிலோ வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் வாழ்வில் அமைதியும், செழிப்பும், நிறைவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், துர்கா பூஜையையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.