கவரப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவரும், சிறப்பு ரயில் மூலம் மீண்டும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்,
மின்சார ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். தெற்கு ரயில்வேயின் ஒருங்கிணைப்பில், அவர்கள் அனைவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம், அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, விபத்து ஏற்பட்ட பகுதி வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தான்பாத் – ஆலப்புழா ரயில், ஜபல்பூர் – மதுரை அதிவிரைவு ரயில் உள்ளிட்டவை எழும்பூர், தாம்பரம் வழித்தடங்களை தவிர்த்துவிட்டு ரேனிகுன்டா, மேலப்பாளையம், செங்கல்பட்டு வழியாக மதுரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.