ஷாங்காய் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக் குடியரசு வீரர் ஜாகப் மென்சிக் உடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6 க்கு 7, 6 க்கு 1, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் மென்சிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.