வீரத்தாய் குயிலியின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த போரில் தாய்நாட்டின் விடுதலைக்காக இராணி வேலுநாச்சியார் அவர்களின் படைக்குத் தலைமை தாங்கி வீரமிக்க போரிட்டு இன்னுயிர் நீத்த வீரத்தாய் குயிலி அவர்களின் 244வது நினைவு தினமான இன்று அவர்களது தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.