ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில், மெக்காலே கல்வி முறை வந்த பிறகுதான் நாட்டில் சமூகநீதி வந்தது என்ற கருத்தை தெரிவித்திருப்பது பிற்போக்குத்தனமானது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், அந்த இடம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமானது எனவும் தெரிவித்தார்.
மேலும்,தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் வெளிநாட்டு கார்ப்பரேட் மற்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராகவும், மெக்காலே கல்விக்கு ஆதரவாகவும் பேசுவது என்பது ஆபத்தானது என்றும் அஸ்வத்தம்மன் தெரிவித்தார்.