சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள ஜிப் லைனில் ஏற்பட்ட கோளாறால் இரண்டு பெண்கள் ரோப் காரில் சிக்கித் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கதீட்ரல் சாலையில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கடந்த 6ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இசை நீரூற்று, விளையாட்டுத் திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறுவர்களுக்கு 50 ரூபாயும் நுழைவு கட்டணமாகவும், ஜிப்லைனில் பயணிக்க 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜிப் லைனில் இரண்டு பெண்கள் சாகச பயணம் மேற்கொண்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரோப் கார் பாதியிலேயே நின்றதால் அச்சமடைந்த அவர்கள் கூச்சலிட்டனர்.தொடர்ந்து 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஜிப் லைனில் சிக்கித் தவித்த பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.