திருப்பதி ஏழுமலையானுக்கு இசை தொண்டு : நெகிழ வைக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு இசை தொண்டு : நெகிழ வைக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையானுக்கு 29 ஆண்டுகளாக இஸ்லாமிய சகோதரர்கள் இசையின் மூலம் தொண்டு செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சகோதரர்கள்…? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் காசிம் மற்றும் பாபு ஆகிய இரு இஸ்லாமிய சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இருவரும் தங்களுடைய நாதஸ்வரம் வாசிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றதோடு திருப்பதி ஏழுமலையானுக்கும் இசையின் மூலம் தொண்டு செய்து வருகின்றனர்.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கரவாடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட காசிம்- பாபு சகோதரர்கள் தற்போது ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய தாத்தா பத்மஸ்ரீ ஷேக் சின்ன மௌலானா. மிகச் சிறந்த நாதஸ்வர இசை கலைஞரான இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிலையில்தான் இவரது பேரன்களான காசிம்- பாபு சகோதரர்கள் 29 ஆண்டுகளுக்கு முன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான்களாக நியமிக்கப்பட்டனர். அந்தப் பணியை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதி தொடர்ந்து ஏழுமலையானுக்கு இசை சேவை செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆகிய கோயில்களில் பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இறைவன் முன் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பை தேவஸ்தானத்திடம் இருந்து காசிம் – பாபு சகோதரர்கள் பெற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், சிருங்கேரி சங்கர மடம், காஞ்சி காமகோடி மடம் ஆகியவற்றிற்கும் ஆஸ்தான வித்வான்களாக இருந்து வருகின்றனர்.

தங்களுடைய ஏழாவது வயது முதல் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொண்டதாகக் கூறும் காசிம்- பாபு சகோதரர்கள் 17-வது வயதில் இருந்து பொது மேடைகளில் நாதஸ்வரம் வாசித்து வருவதாகவும் இசையில் ஆர்வம் கொண்டுள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இலவசமாக இசை பயிற்சி அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இன, மத வேறுபாடின்றி திருப்பதி ஏழுமலையானை பலரும் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய சகோதர்கள் இருவர் இசையின் மூலம் ஏழுமலையானுக்கு பல வருடங்களாக தொண்டாற்றி வருவது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: nathswaram misilim brothersMuslim brothers musiceTirupati Yehumalayan.Kasim Babu brothers108 Divya Desams.
ShareTweetSendShare
Previous Post

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

Next Post

மேற்கு வங்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies