குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மன்னராக சத்ருசல்யாசிங் ஜடேஜா உள்ள நிலையில், ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை தனது மருமகனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜா ஏற்றுக்கொள்வார் என சத்ருசல்யாசிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜாம்நகர் அரச குடும்ப வாரிசாக பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிப்பதாக அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.