இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்படுகிறது. இதனிடையே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானைச் சேர்ந்த 6 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.