ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கார் தானாக முன்னோக்கி நகர்ந்ததால் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனையடுத்து காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
அப்போது ஓட்டுநரே இல்லாத அந்த கார், எதிரே இருந்த வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு தானாகவே முன்னோக்கி நகர்ந்தது. இதனைக் கண்ட அங்கிருந்த வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் தங்களது வாகனங்களை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பியோடினர்.