திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும், 30 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிந்தது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையோ, லட்டு விற்பனையோ குறையவில்லை என்றும், உண்டியல் வசூலும் கடந்த ஆண்டை விட 2 கோடி அதிகமாக இருந்ததாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது