மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவப்படம் 11 ஆயிரம் வைர கற்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தனது 86வது வயதில் மும்பை மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை ரத்தன் டாடா காலமானார்.
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 11 ஆயிரம் வைரங்களைப் பயன்படுத்தி ரத்தன் டாடாவின் உருவப்படத்தை சூரத் நகை வியாபாரி ஒருவர் உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.