தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட, சென்னையில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். 3 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மாலை முதல் அவர்கள் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர் திரும்புவதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், கடுமையான நெரிசல் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.