டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசு அதிகளவில் இருப்பதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி காலங்களில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு டெல்லி அரசு தடை விதித்து வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டும் பட்டாசுகளை உற்பத்தி செய்தல் மற்றும் வெடிப்பதற்கு தடை விதித்து டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவிட்டுள்ளது.