புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு இணையதள பக்கத்தை மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், மான்சுக் மாண்டவியா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
அவசர காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதள பக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், இணையதள பக்கத்தை மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், மான்சுக் மாண்டவியா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், நாட்டின் பொருளாதாரத்துக்கும், சர்வதேச நன்மதிப்புக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆற்றும் பங்களிப்பை போற்றும் வேளையில், அந்நிய மண்ணில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும் அவசியம் என கேட்டுக்கொண்டார்.
வளைகுடா நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்தியா சார்பில் போதிய உதவி செய்யப்படுவதாக கூறிய அவர், அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாக பல்வேறு மொழிகளில் 24 மணிநேரமும் இணையதள பக்கம் சேவையளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.