புதுச்சேரியில் மழை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.