அப்துல் கலாம் வழி நின்று, தேசத்தை வல்லரசாக்க உழைப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்ற ஏவுகணை நாயகர், ‘பாரத ரத்னா’ டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று. அக்னி ஏவுகணை, அணு ஆயுதச் சோதனை என்று அறிவியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர், எளிய குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்து, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.
தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதையும், அவர்களின் செயல்பாடே தேசத்தை வல்லரசாக்கும் என்கிற கருத்திலும் உறுதியாக இருந்தார். இந்தியாவின் மிகவும் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அய்யா அப்துல்கலாம் அவர்களின் வழி நின்று, கல்வியே பெருஞ்செல்வம் என்றுணர்ந்து தேசத்தை வல்லரசாக்க உழைப்போம். அய்யா அப்துல்கலாம் அவர்கள் தேசத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.