6 செ.மீ மழைக்கே தண்ணீர் தேக்கம் - தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!
Jan 18, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

6 செ.மீ மழைக்கே தண்ணீர் தேக்கம் – தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கிள்ளதாகவும், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது  மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை.

சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன.

அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது. சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90% முடிவடைந்து விட்டன, 95% முடிவடைந்து விட்டன என்று ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது.

உண்மையான அக்கரையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின் மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் மகிழுந்துகளை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது.

மகிழுந்துகளை நிறுத்தி வைத்த மக்களில் ஒருவர் கூட தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில் மழை நீர் தேங்காது என்று கூறவில்லை. மாறாக காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை; எங்கள் மகிழுந்துகளை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது.

பாலங்களின் மீது மகிழுந்துகளை நிறுத்துவது போக்குவரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பது தான் உண்மை. ஆனாலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் மகிழுந்துகள் நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகத்தனத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர் என்பது தான்.

தொடக்கத்தில் மகிழுந்துகளை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை மாநகரக் காவல்துறை மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: pmk foundertamilnadu rain. metrological centerrain warningheavy rainrain alertweather updateramadoss
ShareTweetSendShare
Previous Post

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்ப பெற்ற மனுதாரர்!

Next Post

சென்னையில் கனமழை – பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை மூடல்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies