சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜோலார்பேட்டையில் இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய – ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன
அதேபோல், இன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன
இன்று இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ். இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் மெயிலும் ரத்தாகி உள்ளது. மேலும், இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,
காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்,
காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – சென்னை சென்ட்ரல் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்தாகி உள்ளது. காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பகல் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- மைசூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்தாகி உள்ளது.
மேலும், பகல் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – பெங்களூரு லால்பாக் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை – சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.