வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகத்தை போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாளையக்காரர்களை அணிதிரட்டி, தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடி உயிர்நீத்த மாவீரர், வீரபாண்டிய கட்டப்பொம்மன் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடி, வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.