கொடைக்கானல் மலைச்சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கடந்த தினங்களாகவே கனமழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் நெடுஞ்சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே மண் சரிவுடன் மரம் சாலையில் விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கொடைக்கானல் வத்தலகுண்டு செல்லும் மக்கள் சிரமம் அடைந்தனர்.