ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறாது என மாநில தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதனை தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் சுரேந்தர் குமார் சவுத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.
இந்த விழாவில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முஃப்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு தேர்வு செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் உமர் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.