கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
காலை முதல் பெங்களூரில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், பன்னரக்கட்டா ரோடு, ஹெப்பால் மேம்பாலம், அவுட்டர் சிங் சாலை, மாரத்தஹள்ளி, இப்லூர், விமான நிலைய சர்வீஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், பீனிக்ஸ் மால் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. பெங்களூர் புறநகர்களான ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூரிலும் மழை பெய்து வருகிறது.