ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், பொதுமக்களுக்கு சேவையாற்றும் உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், அவருடன் மத்திய அரசு இணைந்து இணக்கமாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் துணை முதலமைச்சராக சுரேந்தர் செளத்ரி உள்பட 4 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.