ராபி சந்தைப்படுத்துதல் பருவத்தையொட்டி, ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2 ஆயிரத்து 275 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 425 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இதேபோல பார்லி விலை ஆயிரத்து 850 ரூபாயிலிருந்து ஆயிரத்து 980 ரூபாயாகவும்,
பயறு விலை 5 ஆயிரத்து 440 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 650 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 6 ஆயிரத்து 425 ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5 ஆயிரத்து 650 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 950 ரூபாயாகவும், குங்குமப்பூ விலை 5 ஆயிரத்து 800 ரூபாயிலிருந்து 5 ஆயிரத்து 940 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.