வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்தது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இந்நிலையில், சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வடமேற்கு திசையில் நகர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.