வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற இந்து அறிஞரும் முனிவருமான மகரிஷி வால்மீகி, பிரபல இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தை எழுதியவராவார்.
இவர் பிறந்த தினமான இன்று வால்மீகி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வால்மீகியின் வாழ்க்கை வரலாறு பற்றிய வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில் பிரதமர் மோடி, அனைவருக்கும் தனது வால்மீகி ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வால்மீகி ஜெயந்தி நன்னாளில், மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்துவதாகவும், அவரைப்போலவே நீதி, கருணை, ஞானம் மற்றும் பக்தி ஆகிய கொள்கைகளுடன் அனைவரும் வழி நடத்தப்பட வாழ்த்துவதாகவும் தனது பதிவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.